• Jul 25 2025

மீண்டும் அம்மன் வேடத்தில் வந்த ரம்யா கிருஷ்ணன்... இது என்ன புது டுவிஸ்டா இருக்கு.....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் நடிகையாக அறிமுகமாகி தற்போது வரையில் இளம் நாயகிகளுக்கு டாப் கொடுக்கும் வகையில் இப்போதும் யங் லேடியாக வளம் வருகிறார். ஜெயிலர் படத்தில் நடித்த பிறகு அடுத்த பட அறிவிப்பு வரும் என எதிர்பாத்த நிலையில் தற்போது ஒரு புது சீரியலில் நடிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.


ரம்யா கிருஷ்ணனின் புகழ் இன்றுவரை  ஓங்கி இருப்பதற்கு காரணம் படையப்பா படத்தில் வில்லியாக வந்து மிரட்டி சூப்பர் ஸ்டாரை பார்த்து" வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவில்லை "என்று கூறும் விதம் தான் மேலும் பல படங்களில் நடித்துள்ள இவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக வந்து அசத்தி இருப்பார்.அத்தோடு அம்மன் வேடம் என்றாலே இவரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது அப்படியே தத்ரூபமாக இருப்பார்.


கடைசியாக ரம்யா கிருஷ்ணன், ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அப்படத்தை தொடர்ந்து வேறு படங்களில் நடிப்பார் அறிவுப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பாத்திருந்தால் இப்போது சின்னத்திரையில் இவர் நடிக்க வந்துள்ளது குறித்து செய்தி வந்துள்ளது.

  

ஏற்கனவே நடிகை ரம்யா கிருஷ்ணன் கலசம், தங்கம், ராஜகுமாரி, வம்சம் என நிறைய தொடர்கள் நடித்துள்ளார்.தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் "நள தமயந்தி" என்ற தொடரில் நடிக்க வந்துள்ளார்.


சீரியலில் அவர் நடிக்கும் காட்சிகள் புகைப்படமாக வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இத்தொடரின் ப்ரோமோ வீடியோ பார்க்கும் போது  இதிலும் அம்மன் வேடத்தில் வருகிறாரோ என்றுத்தான் தோன்றுகிறது .  


Advertisement

Advertisement