விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 இல் பங்கு பற்ற உள்ள போட்டியாளர்கள் யார் யாரென இன்றைய தினம் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பிக் பாஸ் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
அதன்படி சினிமா தயாரிப்பாளரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்பவருமான ரவீந்தர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தற்போது வரையில் அவர்கள் இருவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் பரவலாக தெரிந்தவர் தான் வி.ஜே. விஷால். ஏற்கனவே இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார்.
கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவன் தான் சந்தோஷ் பிரதாப். இவர் சார்பட்டா பரம்பரை, கொன்றால் பாவம் போன்ற சில படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றினார்.
விஜய் டிவி தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் காதென்றல் வந்து என்னைத் தொடும்' என்ற தொடரின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பவித்ரா ஜனனி. இந்த தொடர் சர்ச்சையை கிளப்பியது. எனினும் அதன் பின்பு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்ததாகவும் சொன்னார்கள்.
குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி சீரியல், சினிமா என நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சக்சனா இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் நடித்திருந்தார். இவரும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார்.
குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் சுனிதா கோகோய். இவர் ஒரு டான்ஸராகவும் காணப்படுகிறார்.ணப்படும் ஜாக்குலின் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார். இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பிரபலமான ஐஸ்வர்யா இந்த சீசரின் கலந்து கொள்ள உள்ளார்.
Listen News!