• Aug 23 2025

This is a test article title This is a test article title This is a test article title

Cine / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல பாடகி ஒருவர் திடீரென தான் காது கேட்கும் திறனை இழந்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் திரையுலகின் பிரபல பாடகியாக கடந்த 80கள் மற்றும் 90களில் இருந்தவர் பாடகி அல்கா யாக்னிக். இவர் தமிழில் ’ஓரம்போ’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’இது என்ன மாயம்’ என்ற பாடலையும் வேறு சில பாடல்களையும் பாடியுள்ளார்.


இந்த நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சில வாரங்களுக்கு முன் நான் விமானத்திலிருந்து வெளியே வரும் போது திடீரென என்னால் எதையும் கேட்க முடியவில்லை, ஒரு சில நாட்கள் கழித்து தற்போது இதனை நான் வெளியே செல்கிறேன், எனக்கு வைரஸ் தாக்குதலால் காது கேட்கும் திறன் இழந்துள்ளதாகவும், நரம்பு பாதிப்பு ஏற்பட்டதால் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.


தற்போது அதற்காக நான் சிகிச்சை எடுத்து வருகிறேன், என் நண்பர்கள், ரசிகர்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மேலும் ஒரு முக்கியமான விஷயம், ஹெட்போன்களில் இசையை மிகவும் சத்தமாக வைத்து பாடல்கள் கேட்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள், நான் இவ்வாறு இருந்ததால் தான் தற்போது சிரமப்படுகிறேன், உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் நான் மீண்டும் காது கேட்கும் திறனை பெறுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ’நிச்சயமாக நீங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவீர்கள்’ என ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement