• Jul 25 2025

நீண்ட காலத்திற்கு பிறகு முதலிடத்தை பிடித்த வானத்தைப்போல சீரியல்! திடீரென சறுக்கிய கயல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. அதுவும் 5 மணியில் இருந்து 11:00 மணிவரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் இடையே வரும் விளம்பரங்களை கூட மிஸ் பண்ணாமல் பார்க்கும் நிலையில் தான்  இல்லத்தரசிகள் உள்ளனர்.

இந்த நிலையில், டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த கயல் சீரியல் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. . கடந்த வாரம் கயல், எதிர்நீச்சல், சுந்தரி ஆகிய சீரியல்கள் முறையே முதல் மூன்று இடங்களில் இருந்தன. இவ்வாறான நிலையிலேயே கயல் சீரியல் பின்னடைந்துள்ளது. அத்துடன்,  டிஆர்பி ரேட்டிங்கில் வானத்தைப்போல தொடர் நான்காவது இடத்தில் காணப்பட்டது. 


இவ்வாறான நிலையில் கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி வானத்தைப்போல தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, நீண்ட காலத்திற்கு பிறகு வானத்தைப்போல சீரியல் முதலிடத்தை பிடித்து முன்னிலையிலுள்ளது.

இதனை சமூக வலைத்தளங்களில் அவதானித்த ரசிகர்கள் இதற்க்கு தமது  பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement