• Jul 26 2025

“ நீயெல்லாம் இவரின் பேத்தி தானா ..” ஸ்ருத்திகாவை கலங்கவைத்த பிரபலம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஸ்ரீ. இப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக  14 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்.மேலும்  இப்படத்தினை தொடர்ந்து ஆல்பம், நல்ல தமயந்தி, ஸ்வப்னம் கொண்டு துலம்பரம், தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகையான இரு ஆண்டுகளிலேயே ஆள் அடையாளம் தெரியாதபடி காணமல் போனார். அதன்பின்னர் படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருத்திகா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.

ஸ்ருத்திகா பிரபல காமெடி நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாக சினிமாவில் அறிமுகமாகியவர்.எனினும் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராகினார்.

இதன்பின் மிஸ்டர் மிஸ்சஸ் சின்னத்திரை 4, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சப்போர்ட்டராகவும் இருந்து வருகிறார். அத்தோடு சமீபத்தில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் லியோனி அவர்கள் வருகை தந்திந்தார்.

அவரை வரவழைக்கும் விதமாக ஸ்ருத்திகா அவரை போல் பேசியிருக்கிறார். மேலும் இதனை கேட்ட திண்டுக்கல் லியோனி, நீயெல்லாம் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியா இருக்காய்ன்னு தெரியல, என் வாய்ஸ்ல கூட உன்னால பேசத்தெரியல என்று கூறியுள்ளார்.

மேலும் பாலா பேசியதையும் கலாய்த்திருக்கிறார். இது நிகழ்ச்சியின் பிரமோக்காக பிராங்க் செய்கிறார் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

Advertisement

Advertisement