• Jul 24 2025

உலகளவில் முதல் நாளே 100 கோடி வசூல்!-எந்த ஹிந்தி படமும் நிகழ்த்தாத சாதனையை செய்த பதான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில், ரசிகர்களின் மிகப்பெரிய காத்திருப்புக்கு தீனி போடும் வகையில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் பதான்.இந்த படத்தை ஷாருக்கானின் ரசிகர்கள் வழக்கம்போல்,ஆட்டம், பாட்டம், என திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் அதிகாலை முதலே பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, தொடர்ந்து 'பதான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே போல் இப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்துக்கு நிராகராக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


'பதான்' திரைப்படம் வெளியான முதல் நாளே, இந்திய அளவில் சுமார் 54 கோடி வசூல் செய்தகாக கூறப்பட்ட நிலையில், உலக அளவில் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் செய்த முதல் ஹிந்தி திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.


மேலும் இன்று குடியரசு தினம் என்பதால் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும், இரண்டே நாட்களில் இந்தியாவில்  100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவிக்கும் என சினிமா வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.இப்படம் டிக்கெட் முன்பதிவிலும் KGF படத்தின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement