• Jul 26 2025

100 நாட்களை கடந்த கேஜிஎப்2 - வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு

stella / 3 years ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் மற்றும் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப் . இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருப்பதோடு இந்தப் படம் 1400 கோடி ரூபாய் வசூலை தாண்டி தொடர் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய் வசூலை எட்டியது.

தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி வருகிறது.சென்டிமெண்ட், ஆக்ஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவாக கொடுத்த இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் கேஜிஎப் சாப்டர் 2 படம் வெளியாகி திரையரங்குகளில் 100 நாட்களை கடந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படக்குழுவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. விரைவில் கேஜிஎப் சாப்டர் 3 படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், அதன் அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement