• Jul 26 2025

13 வது வார நாமினேஷன் லிஸ்ட்.. 7 பேரில் உறுதியாக வெளியேறும் போட்டியாளர் இவரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து  ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று மந்தமாக தான் சென்று கொண்டிருக்கிறது.மேலும் இதில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்து வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13ஆவது நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு மணிகண்டன் எலிமினேட் ஆனார். இந்நிலையில் மீதம் பிக் பாஸ் வீட்டில் 8 பேர் உள்ளனர். ஆனால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்க உள்ளது.

ஆகையால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரமன், ஷிவின், ரக்ஷிதா, கதிரவன், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் ஏடிகே ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

மேலும் ஒரு டாஸ்கில் வெற்றி பெற்றதால் அசீம் இந்த வார நாமினேஷனிலிருந்து தப்பித்துள்ளார். அசீம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருந்தாலும் ரசிகர்களால் காப்பாற்றபட்டு விடுவார் என்பது அனைவரும் அறிந்தது தான். அத்தோடு இந்த வார நாமினேஷனில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

அதாவது 13ஆவது வார இறுதியில் கதிரவன் அல்லது ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனென்றால் இவர்கள் இருவரும் மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் பிக் பாஸ் வீட்டில் அதிக ஈடுபாடு இல்லாமல் உள்ளனர். அதிலும் கதிரவன் எதற்குமே குரல் கொடுக்காமல் உள்ளார்.

இவ்வாறு  வெளியான நாமினேஷன் லிஸ்ட்டால் போட்டியாளர்கள் பதட்டத்தில் உள்ளனர். இன்னும் குறைந்த நாட்கள் உள்ள நிலையில் நாம் போய் விடுவோமோ என்ற பயம் போட்டியாளர்கள் முகத்தில் தெரிகிறது. மேலும் இப்போது டாஸ்க்களும் கடுமையாக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement