• Jul 24 2025

முத்தக்காட்சியில் நடிப்பதற்காக 18 வருடங்கள் கடந்திருக்கின்றேன்-சர்ச்சையில் சிக்கியது குறித்து தமன்னா சொன்ன பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகத்தில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தமன்னா.இதனைத் தொடர்ந்து இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கல்லூரி என்ற திரைப்படம் தான்.இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்த இவர் விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்டார். 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகின்றார். அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும்  வரவேற்பையே பெற்றது. தற்பொழுது தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.இது தவிர ரஜினியின் ஜெயிலர் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நான் முத்தக் காட்சியில் நடிப்பதை முன்பெல்லாம் விரும்பியதில்லை. ஆனால் இப்படி நடிப்பதற்கு 18 வருடங்களை கடந்திருக்கிறேன். குறிப்பாக இந்தக் கதைக்கு முத்தக் காட்சி தேவைப்பட்டது. லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் எனது கதையை இயக்கிய சுஜோய் கோஷ் நல்ல இயக்குநர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்கவில்லை. இந்தியா பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை அணுகுவதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது" என்றார்.


இந்தச் சூழலில் தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுகுறித்து இரண்டு பேருமே மௌனம் காத்து வந்தனர். இந்தச் சூழலில் சில நாள்களுக்கு முன்பாக விஜய் வர்மாவுடனான தனது காதலை உறுதிப்படுத்தினார் தமன்னா. தனது காதல் பற்றி தமன்னா பேசுகையில்,'என்னுடன் நடிக்கும் நடிகரை காதலிப்பேன் என நான் நினைக்கவில்லை. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் விஜய் வர்மாவுடன் காதல் ஏற்பட்டது. நான் எதிர்பார்க்கும் நபர் போலவே இருந்தார்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement