• Jul 25 2025

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் 2 போட்டியாளர்கள்...அட இவர்களா..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்த வாரம் டபுள் நாமினேஷன் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 8 வாரங்களைக் கடந்த நிலையில் ஆட்டம் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பமாகி உள்ளது. கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உள்ள குறைகளை பாரபட்சம் பார்க்காமல் எடுத்து சொல்லி வருகின்றார்.

ஆகையால் தங்களது தவறை திருத்திக் கொண்டு இந்த வாரம் விறுவிறுப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறுஇருக்கையில்  நேற்றைய எபிசோடில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதைக் கேட்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஆடிப் போய்விட்டனர்.

மேலும் இந்த வார தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, ஷிவின் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதற்கு நடத்தப்பட்ட டாஸ்கில் மணிகண்டன் வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகையால் மணிகண்டனுக்கு இந்த வார எவிக்ஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 விக்ரமன், அசீம், ஷிவின் மூவருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருப்பதால் இவர்கள் கடைசி வாரம் வரை பயணிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மீதம் உள்ள மற்ற போட்டியாளர்களின் ஏடிகே, அமுதவாணன், ஜனனி, ராம், கதிரவன், நந்தினி, ரக்ஷிதா, ஆயிஷா இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார்கள்.

இவ்வாறுஇருக்கையில்  கடந்த வாரம் குயின்ஸி வெளியேறிய நிலையில் இந்த வாரம் ரக்ஷிதா மற்றும் மைனா நந்தினி இருவரும் சேர்ந்தே வெளியேறுவார்கள் என பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால் இவர்கள் மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர்களாக இருந்தாலும் இவர்களது நடவடிக்கை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

அத்தோடு  ஏடிகே மற்றும் ஜனனி இருவரும் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சிலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் குயின்ஸி போல இவர்களும் மிச்சர் போட்டியாளராக உள்ளனர். இந்த வாரம் இவர்களது ஆட்டத்தை வைத்து தான் ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement