• Jul 26 2025

24மணி நேரமும் அவருக்கு அதே நினைப்பு மட்டும் தான் என் வயசை கூட யோசிக்கல- கண்ணீர் மல்க கூறிய சம்யுக்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்த சம்யுக்தா, ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து ஒரு மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதையடுத்து, விவாகரத்து முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, எனக்கு ஆதரவாக பல செய்திகள் இணையத்தில் வந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். திருமணத்திற்கு பிறகு நான் உண்மையில் மனஅழுத்தத்தில் இருந்தேன். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா உங்களின் ஆதரவால் மீண்டு வந்துள்ளேன். நிறைய அழுதுவிட்டதால், நேரலையில் அழக்கூடாது என்ற நினைத்தேன் ஆனால், உங்கள் அன்பு என்னை அழவைத்துவிட்டது.


எனக்கு இப்போது தான் 22 வயசு ஆகிறது. ஆனால் அவருக்கு 32 வயசு ஆகிறது. அவருடைய வயசைக்கூட நான் பெரியதாக பார்க்கவில்லை அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடித்து இருந்ததால், காதலித்தேன். ஆனால், திருமணம் முடிவானதும் அவர் மொத்தமாக மாறிவிட்டார். அவர்கள் வீட்டில் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் அதற்கும் நான் சம்பதித்தேன்.

என் அப்பா வீட்டிற்கு வருவது அவருக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை, ஏன் என்றால் 24 மணி நேரமும் அவருக்கு அது வேண்டும். சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு என்று எல்லாத்திற்கும் தனித்தனியாக நேரம் இருக்கு ஆனால், இவர் 24 மணிநேரமும் அவருக்கு அதே நினைப்பு தான். என்னடா இந்த பொண்ணுக்கு 22 வயசு தானே ஆச்சு என்பதைக்கூட அவர் யோசிக்கல. அவருக்கு தேவை அது.


இதற்கு நான் சம்மதிக்கவில்லை என்றால், அதற்கும் கோவப்படுவார். காதலை இதில் தான் காட்டுவீங்களா? இதுக்கு பேரு லவ் இல்ல. தயவு செய்து கல்யாணம் செய்து கொண்ட அனைவரும் லவ் பண்ணுங்க அப்போத்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சீரியல் நடிகை சம்யுக்தா கண்ணீர் மல்க கூறினார்.


Advertisement

Advertisement