• Jul 25 2025

25வயதான பாப் பாடகர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக கொரியாவில் பாடகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் பலரும் மர்மமான முறையில் மரணிப்பது தொடர்கதையாகி உள்ளது. அதுமட்டுமல்லாது சிலர் தற்கொலையும் செய்து கொண்டு இறந்துள்ளனர்.


அந்தவரிசையில் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல கொரிய பாப் பாடகர் மூன்பின் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் எனவும் முதல் கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். 


மூன்பின் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாரா? வெறும் 25 வயதில் அப்படி அவருக்கு என்ன தான் ஆச்சு..? இது கொலையா..? தற்கொலையா..? திடீர் மரணமா..? என கேட்டு ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இவரின் மரணத்திற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement