• Jul 25 2025

26 வயது இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மரணம்- கடும் சோகத்தில் சாந்தனு

stella / 2 years ago

Advertisement

Listen News!


சினிமாவில் பெரும் இயக்குநராக வளர வேண்டும் என்கிற கனவுடன் இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்து வந்த இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா.இவர்  ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனை நடிகர் சாந்தனு இளம் உதவி இயக்குநரான ராமகிருஷ்ணாவுக்கு வெறும் 26 வயது தான் ஆகிறது என்றும் ராமகிருஷ்ணா எனது உயிர் நண்பர் என்றும் சாந்தனு பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் மன வேதனையையும் ரசிகர்கள் மத்தியில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை நிலையானது அல்ல, எந்த நேரத்தில் என்ன ஆகும் என்றே கணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .


அந்த இளம் இயக்குநருக்கு எந்தவொரு கெட்டப் பழக்கமும் இருந்தது கிடையாது.ஆனால், வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார் என்றும் தேவையில்லாத ஹேட்ரட்களையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என சாந்தராமகிருஷ்ணா உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கடைசியாக எனக்கு போன் பண்ணியிருந்தார். ஆனால், என்னால் அந்த போன் காலை எடுக்க முடியவில்லையே என ரொம்பவே மன வேதனையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் சாந்தனு.


இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான். அதனால் தான் அந்த இளம் இயக்குநர் உயிரிழந்துள்ளார் என சாந்தனு கூறியுள்ளார். ஈகோ மற்றும் நெகட்டிவிட்டியை தூக்கி எறியுங்கள் நண்பர்களே என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் சாந்தனு தற்போது இராவணக் கோட்டம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement