• Jul 25 2025

27 வருடத்திற்கு முதல் நடிகர் அப்பாஸ் ஷுட்டிங்கில் எடுத்த முதல் ஸ்டில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அப்பாஸ். இவர் இதனைத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் 2016-ம் ஆண்டு வெளியானது.


கடந்த 2001-ம் ஆண்டு எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் உள்ளனர். அப்பாஸ் தற்போது  குடும்பத்தாருடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.

நடிகர் அப்பாஸ், சில மாதங்களுக்கு முன் தனது கால் முட்டியில்  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தன்னுடைய முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டதாகவும் குணமாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.


இச்சூழலில் நடிகர் அப்பாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். "என்னுடைய நண்பரும் மிகச் சிறந்த மனிதருமான ஒளிப்பதிவாளர் மாதவ்ராஜ் என்கிற ராஜேஷ் உடன் என்னுடைய முதல் படத்தின் ஸ்டில்" என அப்பாஸ் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement