• Jul 25 2025

27 வயதான பிரபல நடிகை சிறையிலிருந்து விடுவிப்பு... தீயாய் பரவும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இந்தி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கிரிசன் பெரிரா. 27வயதான இவருக்கு ஹாலிவுட் வெப் சீரிஸ்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, ஒரு சிலர் அவரை துபாய்க்கு விமானத்தில் அனுப்பி வைத்து, அங்கு அவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தனர். 

இதனையடுத்து கிரிசன் பெரிரா உடனடியாக சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து கிரிசன் பெரிராவை வேண்டுமென்றே சிலர் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்ததாக அவரது தாய் பிரமிளா மும்பை போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். 


பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நடிகையின் தாய் அளித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடிகை கிரிசன் பெரிராவை திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த ரவி போபதே, அந்தோணி பவுலை கைது செய்தனர். 

இந்நிலையில் சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த கிரிசன் பெரிரா தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது சகோதரர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் 2 நாளில் மும்பை திரும்புவார் எனவும் அவர் இப்பதிவின் வாயிலாக தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement