• Jul 25 2025

பிக் பாஸில் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் 3 போட்டியாளர்கள்.. கேமரா முன் இப்படி உளறி விட்டார்களே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் விஷயத்தை அவர்கள் வாயாலே கேமரா முன்பு கூறியுள்ளனர்.

50 நாட்களைக் கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்கத் துவங்கிய நிலையில் ஒவ்வொரு வார தொடக்கத்தில் நாமினேஷன் லிஸ்ட் ரெடி ஆகி அதில் இடம்பெறும் போட்டியாளர்கள் மக்கள் ஓட்டின் அடிப்படையில், குறைந்த ஓட்டுக்களை பெறும் நபர் வார இறுதி நாட்களில் வெளியேறுவார்கள்.

மேலும் இதில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் அவரைத் தொடர்ந்து குயின்ஸி தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். மீதமிருக்கும் போட்டியாளர்களில் சிலர் காசு கொடுத்து தான் ஓட்டு வாங்குகின்றனர் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

இதை பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் மூவர் தங்களது வாயால் கேமரா இருப்பது தெரியாமலே நேரலையில் உளறியது கேவலமானது. அதாவது இவர்கள் பிக்பாஸ் ரசிகர்கள் போடும் ஓட்டிற்கு தரகராக பிஆர்ஓ வேலை பார்ப்பவர்களுக்கு காசு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அத்தோடு ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுக்கென வைத்திருக்கும் மேனேஜர் என்று கூறப்படும்  பிஆர்ஓ மூலம் சினிமா வாய்ப்புகளையும் பப்ளிசிட்டியையும் தேடிக் கொள்வார்கள். அப்படிதான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மூன்று பிரபலங்கள் பிஆர்ஓவை வைத்து காசு கொடுத்து ஓட்டு வாங்கியுள்ளனர்.

ஏனென்றால் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களான ராம், தனலட்சுமி, ஜனனி ஆகிய மூவரும் ரசிகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமானவர்கள் அல்ல. இதனால் ராம் 2 லட்சம், தனலட்சுமி 5 லட்சம், ஜனனி ஒரு லட்சம் என்று பிஆர்ஓ-விடம் கொடுத்துவிட்டு ரசிகர்கள் மூலம் ஓட்டுகளை வாங்கி வருகின்றனர்.

மேலும் இது எவ்வளவு பெரிய பித்தலாட்ட வேலை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஒண்ணுமே செய்யாமல் ராம் இவ்வளவு நாள் இருப்பதும், அடாவடி செய்து கொண்டிருக்கும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது என்று இவர்கள் மூவரையும் பிக் பாஸ் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கிழித்து தொங்க விடுகின்றனர் .

Advertisement

Advertisement