• Sep 09 2025

அந்த கொஞ்ச நேரத்திற்காக 30 லட்சம் ரூபாயா?.. சமந்தா செய்யும் அட்ராசிட்டி..! ரசிகர்கள் ஷாக்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தாஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். ஆனால் அவரே எதிர்பார்க்க சூழலில் மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓரளவு அந்த நோயிலிருந்து மீண்டார்.


பின்னர் மீண்டும் திரைப்படங்களில் கமிட்டானார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் பவந்து டம் அட்டர் ப்ளாப் ஆனது.சமந்தாவின் கரியரிலேயே படுதோல்வியை சந்தித்த படமாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க கமிட்டானார்.

இப்.படமானது செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. 


. தற்போது அந்த ப்ரோமோஷன் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்திலும்,அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ப்ரோமோஷன் என்றால் படத்தில் நடித்த நடிகையோ, நடிகரோ பணம் வாங்காததுதான் வழக்கம்.


ஆனால் சமந்தாவோ சில மணி நேரம் மட்டுமே நடக்கவிருக்கும் ப்ரோமோஷனுக்காக 30 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement