• Jul 26 2025

தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 36வயதாகும் நடிகை பூனம் கவுர்-சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

இது "பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்" ஆகிய பிரச்னைகளை கொண்டிருக்கும். அத்தோடு பல மொழிகளில் நடித்துள்ள பூனம், சமீபத்தில் கேரளாவில் இருந்தார். அப்போது அவருக்கு இந்த பிரச்னை இருப்பது நிபுணர்களால் கண்டறியப்பட்டது.


எனினும் இதற்கு அறிகுறிகளைக் கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்றி, உடற்பயிற்சி, தெரபிகள் மற்றும் சிகிச்சைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். எனினும் இந்த ஃபைப்ரோமியால்ஜியா ஒருவருக்கு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும்  அதோடே அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டுமென மெடிக்கல் போர்ட்டல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்தோடு பூனம் கவுருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான உடல் வலி இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெலுங்கு ஊடகத்திடம் கூறியுள்ளார். தெலுங்கு மாநிலங்களில் சமூக செயல்பாட்டாளராக வலம் வரும் பூனம், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார்.


36 வயதாகும் பூனம், தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், வெடி உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement