• Jul 26 2025

1000 கோடி வசூலைத் தொட்ட 4படங்கள்.. அந்த வரிசையில் இந்தப் படமும் இணையப் போகின்றதா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் ஏராளமான படங்கள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாகின்றன. 

இவ்வாறாக எத்தனை ஆயிரம் படங்கள் வெளிவந்திருந்தாலும் இதுவரை குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படங்கள் யாவை எனப் பார்ப்போம்.

ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனையை முதல் முதலாக செய்த திரைப்படம் என்றால் அது ஹாலிவுட் சினிமாவில் அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' என்ற திரைப்படம் தான்.


இந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படமானது ஆயிரம் கோடி வசூல் சாதனையை படைத்தது.


அடுத்ததாக கன்னட திரை உலகில் வெளியான 'கேஜிஎப் 2' திரைப்படஆயிரம் கோடி வசூல் சாதனையை படைத்தது.


இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'RRR' திரைப்படமானது 1000 கோடி வசூல் சாதனையை படைத்தது.

இந்நிலையில் இந்த படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமான 'பொன்னியின் செல்வன் பார்ட் 2' திரைப்படமும் ஆயிரம் கோடி வசூல் சாதனையை பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement