• Jul 25 2025

முடிவுக்கு வரும் 4நிகழ்ச்சிகள்... விஜய் டிவி ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பொழுதுபோக்கு சேனல்களின் வரிசையில் எப்போதுமே முன்னிலையில் இருந்து வருவது விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அது சீரியலாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி எளிதில் மக்களை கவர்ந்து விடுகின்றன.


இதில் ரியாலிட்டி ஷோக்களை பொறுத்தவரையில் எப்போதுமே சிரிப்பிற்குப் பஞ்சம் இருப்பதில்லை. கவலையாக இருக்கும் மக்களையும் கலகலப்பாக மாற்றும் திறமை குறித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு உண்டு. 

இந்நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளிவந்துள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 4 நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 'சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் மற்றும் கலக்கப்போவது யாரு' போன்ற நிகழ்ச்சிகளே அவையாகும்.


அதுமட்டுமல்லாது புதிய நிகழ்ச்சி ஒன்றும்  மீண்டும் தொடங்கவுள்ளது. அதாவது Ready Steady Po போன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement