• Jul 24 2025

மேலும் 43சவரன் நகை மீட்பு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருட்டு வழக்கில் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்.. குழப்பத்தில் போலீசார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாக கடந்த வாரத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதாவது கிட்டதட்ட 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளோடு பாரம்பரிய நகைகளும் வீட்டு லாக்கரில் இருந்தது எனவும் அது தற்போது காணவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாது தனது வீட்டில் வேலை பார்க்கும் ஈஸ்வரி என்பவர் மீதும் கார் ஓட்டுநர் ஈஸ்வரன் என்பவர் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.


இதனித் தொடர்ந்து தீவிர விசாரணை மூலம் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்பவர் தான் நகையை திருடி உள்ளார் என்பதை போலீஸ் கண்டுபிடித்தனர். பின்னர் கார் டிரைவருக்கும் இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஏற்கனவே அவர்களிடம் இருந்து 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பில் வீடு வாங்கியதற்கான சொத்து பத்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தற்போது கைதான ஈஸ்வரியிடம் இருந்து மேலும் 43 சவரன் நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருக்கின்றனர்.


அதாவது ஐஸ்வர்யா 60 சவரன் நகைகள் திருடுபோனதாக கூறிய நிலையில், ஈஸ்வரியிடம் இருந்து தற்போது 140 சவரனுக்கு மேல் நகைகள் மீட்கப்பட்டுள்ளதால் போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா கூறியதை விட சுமார் 2மடங்கு நகைகளுக்கு மேல் கைப்பற்றியதால் குழம்பிப் போய் உள்ளார்களாம். இதுகுறித்து ஐஸ்வர்யாவிடமும் அவர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement