• Jul 25 2025

நடிகர் மனோஜ் படப்பிடிப்பில் பயங்கர விபத்து... மயிரிழையில் உயிர் தப்பிய 5பேர்... வேதனையில் தயாரிப்பாளர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தந்தை பாரதிராஜாவைப் போலவே தற்போது நடிகர் மனோஜ்ஜூம் இயக்குநராக சினிமாவில் களமிறங்கி இறங்கி இருக்கின்றார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த மனோஜ் எதிர்பார்த்தளவிற்கு வெற்றிப் படங்கள் அமையாததால் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.


இந்நிலையில் தற்போது மனோஜ் 'மார்கழி திங்கள்' என்ற படத்தை இயக்கி வருகின்றார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன், தன்னுடைய வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரமாண்டமாக தயாரிகின்றார்.

கிராமத்து கதையம்சம் நிறைந்ததாக உருவாகி வரும் இந்த படத்தின் உடைய படப்பிடிப்பு ஆனது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது இப்படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக இயற்கை சீற்றத்தால் விபத்து நேர்ந்துள்ளது.


இது தொடர்பாக தயாரிப்பாளரான சுசீந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் "மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பு பழனிக்கு பக்கத்தில் உள்ள கணக்கம்பட்டி என்கிற கிராமத்தில் இருக்கும் காட்டு கோவிலில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பை முடித்த பின்னர், மக்காச்சோளம் காட்டுக்கு நடுவே பெரிய கோடாலி லைட் எல்லாம் செட் பண்ணி, படபிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தோம்.

ஆனால் யாருமே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதமாக, இடி மின்னலுடன் பயங்கரமான காற்று மழை அடித்ததால், அனைவருமே ஒரு நிமிடம் பயத்தில் ஸ்தம்பித்து போனோம். அங்கு படபிடிப்புக்காக நாம் வைத்திருந்த கோடாலி மற்றும் லைட்டுகள் எல்லாமே கீழே விழுந்து நொறுங்கி விட்டது. 

அதுமட்டுமல்லாது ஒரு லைட் மீது இடி விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட் மேன் உயிர் தப்பினார்கள் எனவும் தயாரிப்பாளர் சுசீந்திரன் வேதனையில் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement