• Jul 23 2025

20வயதில் வந்த ஆசை... 26வருடங்களின் பின் நிறைவேறியது... 62வயது நடிகருடன் இணைந்த சிம்ரன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

குறிப்பாக 90களில் பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் இயக்குனநர் சபாபதி தேவசதேக்ஷின மூர்த்தி இயக்கத்தில் வெளியான 'விஐபி' என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்திருந்தார் சிம்ரன்.

அறிமுகப் படத்தைத் தொடர்ந்து 'ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், வாலி' என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.


சிம்ரன் முன்னணி ஹீரோயினாக இருந்தபோது இவர் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்திக். அதாவது சிம்ரன் திரையுலகில் அடி எடுத்து வைத்த போது கார்த்திக் நடிப்பில் வெளியான 'பிஸ்தா, சுந்தர பாண்டியன், ஹரிச்சந்திரன், ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம்' போன்ற பல ஹிட் படங்கள் வெளியானது.


இதனால் கார்த்திக்குடன் ஒரு படத்திலாவது, இணைந்து நடிக்க முடியாத என தன்னுடைய 20 வயதில் ஏங்கிய சிம்ரனுக்கு, தற்போது 46 வயதில் அந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பிரஷாந்த் ஹீரோவாக நடித்து வரும் 'அந்தகன்' படத்தில்,  நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளார்.


அத்தோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா, உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தை தியாகராஜன் இயக்க, ஸ்டார் மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.


இந்நிலையில் 26 வருடங்களுக்கு பின் சிம்ரனின் ஆசை நிறைவேறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளமை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பாலிவுட் திரையுலகில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், கண்டிப்பாக தமிழில் இந்த படம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement