• Jul 25 2025

CWC ஷோவில் சமைத்த உணவை சாப்பிட்டதால் ... வாந்தி எடுத்து மயங்கிய சிறுவன்.. அதிர்ச்சியில் நடுவர்கள்... வெளியானது வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'. கடந்த 3 சீசன்களும் மெகா ஹிட் கொடுத்த நிலையில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் 4-ஆவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்‌ஷன் தொடர்கிறார்.


மேலும் இந்த ஷோவில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் பேர் எலிமினேட் ஆகி இருக்கும் நிலையில் பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். எது எவ்வாறாயினும் நிகழ்ச்சியானது சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் பவி என்ற குட்டிப் பையனுக்கு நடுவர்கள் ஷோவில் சமைத்த உணவை ஊட்டுகின்றனர். அதற்கு அந்த சிறுவன் தனக்கு மரக்கறி உணவு பிடிக்காது என்று கூறுகின்றார்.


ஆனாலும் வலு கட்டாயமாக அவனுக்கு அந்த உணவை ஊட்டுகின்றனர். அதை சாப்பிட்டதும் அந்த சிறுவன் வாந்தி எடுப்பதுபோல் நடிக்கின்றார். பின்னர் மயங்கி விழுகின்றார். அதைப் பார்த்ததும் சுற்றி நின்றவர்கள் என்னடாச்சு எனக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். 

உடனே அந்த சிறுவன் எழும்புகின்றான். அதன் பின்னர் அவன் மயக்கம் வருவது போல் நடித்துள்ளான் என்பது அவர்களுக்கு தெரிய வருகின்றது.  இவ்வாறாக அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement