• Jul 23 2025

தல தளபதிக்கிடையில் ஆரம்பமாகிறது போட்டியான திரைப்படம்? வெற்றி பெறப்போவது யார்? தலயா? தளபதியா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!



தமிழ் சினிமாவில் அஜித், விஜய்  இருவருக்கும் தனியான ரசிகர் கூட்டமே இருக்கின்றது.   பல முறை இவர்களின் படம் நேருக்கு நேராக மோதிக்கொண்டுள்ளது. அந்த வகையில், இவர்களின் போட்டி மறுபடியும் ஆரம்பமாகியிருக்கிறது.


இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் விடாமுயற்சி  திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என கூறப்பட்டது.



இந்நிலையில், லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்ததாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் அவரது 68வது படத்திற்காக இணைந்திருக்கிறார். தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பும் அக்டோபர் 3ஆம் தேதியே தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை விஜய் ரசிகர்கள் அஜித்தை முந்திய விஜய் என கொண்டாடிவருகின்றனர். மேலும், விடாமுயற்சி, தளபதி 68 என இரண்டு படங்களுமே அடுத்தாண்டு ஜனவரி மாதத்திலேயே வெளியாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement