• Jul 24 2025

தேவயானியை இரண்டாம் திருமணம் செய்யக் கேட்ட பிரபல நடிகர்... அவரின் அம்மா கொடுத்த முகத்தடி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவரே நடிகை தேவயானி. இவர் குறிப்பாக 90களில் கொடிக்கட்டி பறந்த ஒரு நடிகையாக காணப்படுகின்றார். 


அதுமட்டுமல்லாது அஜித், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். இவ்வாறாக சினிமாவில் அறிமுகமாகி பிஸியாக நடித்து வந்த தேவயானி பிரபல இயக்குநர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2பெண் குழந்தைகள் உள்ளனர்.


அத்தோடு தேவயானி தன்னுடைய குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால் அவரின் குடும்பமே இருவரை ஒதுக்கி வைத்திருந்தது. இப்படியொரு சூழலில் தேவயானி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவரை சரத்குமார் காதலித்து வந்துள்ளார். 


அந்தவகையில் 1984இல் சாயா என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்ற சரத்குமார் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 16 ஆண்டு திருமண வாழ்க்கையை விவாகரத்துமூலம் முறித்துக்கொண்டனர். இதற்கு முக்கியமான காரணம், சாயா மனைவியாக இருக்கும் போதே நடிகை தேவயானியை ஒருதலையாக சரத்குமார் காதலித்தது வந்தமை தானாம்.


அதுமட்டுமல்லாது ஆரம்பத்தில் நக்மா, ஹீரா ஆகியோருடன் காதலில் இருந்து அதற்குப் பின்னர் தான் தேவயானியை காதலித்திருக்கிறார் சரத்குமார். இதனைத் தொடர்ந்து தேவயானியின் அம்மாவிடமே நேரில் சென்று பெண் கேட்டுள்ளார் சரத்குமார். 


இதனைக் கேட்ட தேவயானியின் அம்மா மகளின் கேரியர் ரொம்ப முக்கியம் என்று கூறி அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார். இதன்பின்னர் தான் 2001 இல் நடிகை ராதிகாவை திருமணம் செய்திருக்கிறார். தற்போது இருக்கும் சரத்குமாரை சரிபட மாற்றியதே நடிகை ராதிகா தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூட அவ்வப்போது கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement