• Jul 26 2025

மீண்டும் கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்...அதுவும் இந்த இயக்குனரின் இயக்கத்திலா!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.


கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும் வென்றுள்ளார்.


நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.


மேலும் இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. 


இந்நிலையில் கமல் ஹாசன் எச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் கமல் ஹாசன் - மணி ரத்னம் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது.


கமலின் 234வது படத்தை மணி ரத்னம் இயக்கவுள்ளார். இப்படத்தை ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் தயாரிக்கிறது.


எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement