• Jul 26 2025

15 வயதில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை..குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

15 வயதிலேயே பிரபல நடிகை ஒருவர் சொந்தமாக வீடு வாங்கி உள்ள விஷயம், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலம் ஆனவர் நடிகை ருஹானிகா தவான்.அத்தோடு சிறு வயதிலேயே அதிகம் பெயர் எடுத்த நடிகை ருஹானிகா தவான், அசத்தலான இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக, அனைவருக்கும் சொந்தமாக வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்பதோ அல்லது கட்ட வேண்டும் என்பதோ பெரிய கனவாக இருக்கும். அதிலும் நகரங்களில் வீடு வாங்குவது என்பது மிகப் பெரிய லட்சியமாகவே பார்க்கப்படும்.மேலும்  அப்படி இருக்கையில், 15 வயதே ஆகும் ருஹானிகா மும்பை மாநகரில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி உள்ளார்


மேலும் இது தொடர்பான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ருஹானிகா, தனது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது தொடர்பாக சில புகைப்படங்களை ருஹானிகா தவான் வெளியிட்டுள்ளார்.அத்தோடு  வீட்டு சாவியுடன் இருக்கும் புகைப்படத்தையும், தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்த ருஹானிகா, தனது கேப்ஷனில் "என் மனது நிறைந்துள்ளது. என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் வீடு வாங்க வேண்டும் என கனவு கொண்டிருந்தேன். அது தற்போது நிறைவேறி உள்ளது. அதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இதனை நான் எட்டுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


எனது பெற்றோரின் ஆசி மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் நான் இதை எட்டி இருக்க முடியாது. அத்தோடு இன்று என்னால் செய்ய முடிந்தது உங்களாலும் செய்ய முடியும். கனவு காணுங்கள். அதை பின் தொடருங்கள். ஒரு நாள் நிச்சயம் அதை அடைவீர்கள்" என பெருமிதத்துடன் மனம் நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.

சீரியல்களில் நடித்து 15 வயதிலேயே சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ள நடிகை ருஹானிகா தவானை பலரும் வாழ்த்தி வருகின்றார்கள்.



Advertisement

Advertisement