• Jul 26 2025

நடிகரை காதலித்து கரம் பிடிக்கும் பிரபல நடிகை – குவியும் வாழ்த்து..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரியா வாரியாருடன் “ஒரு அடார் லவ்” படத்தில் நடித்திருத்த நூரின் ஷெரிப் என்பவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக வந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை ஒரே பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை குவித்தது.

சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அத்தோடு ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் எடுக்கப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  பிரியா வாரியர் நடித்திருந்த “ஒரு அடார் லவ்” படத்தில் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நூரின் ஷெரிப். தொடக்கத்தில் “ஒரு அடார் லவ்” படத்தில் முதல் கதாநாயகியாக நடிக்க நூரின் ஷெரிபிற்குத்தான் வாய்ப்பு கிடைத்து. ஆனால் பிரியா வாரியார் கண் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே முதலாவது கதாநாயகியாக பிரியாவாரியரும், இரண்டாவது கதாநாயகியாக நூரின் ஷெரிபும் நடித்திருந்தார் இவர் அவருக்கு வருத்திதை ஏற்படுத்தியது.


ஆனால் படம் வெளியான பிறகு பிரியா வாரியரை விட நூரின் ஷெரிபின் நடிப்பையே ரசிகர்கள் அதிக அளவு விரும்பினார். இதனால் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் இவர் மலையாளம் தவிர்த்து தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறுஇருக்கையில்  “ஒரு அடார் லவ்” பட நடிகை நூரின் ஷெரிப்பிற்கும் தெலுங்கு நடிகரும் திரைப்பட கதாசிரியருமான பாஹிம் சபருடன் திருமண நிச்சய தர்த்தம் தற்போது நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்த நிலையில் நடிகை நூரின் செரிப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் அதில் நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம், அவர்கள் வேலையில் தற்செயலாக சந்தித்தோம்! நண்பர்களாக இருந்து சிறந்த நண்பர்களாகி தற்போது ஆத்ம துணைகள் வரை வந்துள்ளோம் எங்களின் காதல் பயணத்தில். ஒளி மற்றும் நிறைய சிரிப்புகள் நிறைந்த பயணம். இதோ எங்கள் கதையின் புதிய காட்சி, எங்கள் நிச்சயதார்த்தம் என பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement