• Jul 24 2025

கொச்சியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் திடீர் மரணம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது ரசிகர்களை சோகத்துக்குள் தள்ளி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது இயக்குநர் ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாளத் திரையுலகில் இயக்குநராக இருந்து வருபவர் தான் அசோகன். இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் சிங்கப்பூரில் இருந்து கேரளாவுக்கு வந்ததோடு கொச்சியில் உள்ள மருத்துவனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.


சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் கடந்த ஞாயிறன்று அவர் உயிரிழந்தார்.இவரது இறப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு அவரது மறைவிற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அசோகன் கடந்த 1989-ம் ஆண்டு ரிலீசான வர்ணம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் முக்கியமாகும். அவரது இயக்கத்தில் கடைசியாக மெலடி ஆஃப் லோன்லினெஸ் என்கிற படம் ரிலீஸானது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement