• Jul 23 2025

லியோ படத்தின் intro காட்சியை பார்த்து மிரண்ட போன பிரபல இளம் நடிகர்- எப்பிடி இருக்கு தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது.

விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.தற்போது லியோ படம் வெளியாக சில நாட்கள் இருக்கும் நிலையில், இப்படத்தை விஜய் பார்த்துவிட்டாராம். மேலும் படத்தை பார்த்து முடித்தவுடன் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மேலும் லோகேஷ் கனகராஜ் அருமையாக எடுத்துள்ளார் என்று விஜய் சொன்னதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.


மேலும் விஜய்யின் காரெக்டர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.லியோ படத்தின் எடிட்டிங் பணிகள் நடக்கும் இடத்திற்கு நடிகர் மகேந்திரன் சென்ற போது, விஜய் இன்ட்ரோ காட்சியை பார்க்க விருப்பமா என லோகேஷ் கேட்டிருக்கிறார்.

"வேண்டாம், என் வாய் சும்மா இருக்காது, யாரிடமாவது கூறி விடுவேன்" என மகேந்திரன் கூறி இருக்கிறார். ஆனாலும் லோகேஷ் 5 நிமிட intro காட்சியை அவருக்கு காட்டி இருக்கிறார். அதை பற்றி நீ யாரிடமும் சொல்ல கூடாது, அது தான் உனக்கு தண்டனை என லோகேஷ் சொல்லி அனுப்பி இருக்கிறார். ஆனால் இது குறித்து மாஸ்டர் மகேந்திரன் உளறியுள்ளார்.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement