• Jul 25 2025

திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட ரசிகர்... ரேஷ்மா போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ரேஷ்மா பசுபுலேட்டி, அடுத்தடுத்த ரீல்ஸ், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறார்.

 நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடிகர் சூரியின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து வெப் தொடர்களிலும் ரேஷ்மா நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி, சீதாராமன் போன்ற தொடர்களிலும் முன்னணி கேரக்டர்களில் இவர் நடித்து வருகிறார். முக்கியமாக பாக்கியலட்சுமி தொடர் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கேரக்டரில் நாயகனின் இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார் ரேஷ்மா. இந்தக் கேரக்டரில் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில், நாயகனின் முதல் மனைவியின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் இவர் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதனால் சமயத்தில் வில்லியாகவும் சமயத்தில் கேரக்டர் ரோலிலும் இவர் காணப்படுகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ். இதனிடையே, சமூக வலைதளத்தில் ரேஷ்மாவிடம் ரசிகர்கள் கேள்வி -பதில் செஷனை நடத்தினர். அதில் ஒரு ரசிகர், ரேஷ்மாவை திருமணம் செய்துக் கொள்ள கேட்டார். இதற்கு பதிலளித்த ரேஷ்மா, கண்டிப்பாக, ஆனால் தன்னுடைய அம்மா அதற்கு அனுமதி அளிக்க மாட்டார், என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement