• Jul 26 2025

நடிகர் துல்கரைக் கண்டதும் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்- உடனடியாக அவர் என்ன செய்தார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகரான மம்முட்டியின் மகன் என்பதும் யாவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் "சீதா ராமம்"

இப்படத்தில் இவருடன் மிருணாள் தாகூர் ராஷ்மிகா மந்தனா, கவுதம் வாசுதேவ் மேனன்,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1960 களில், போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்தி உருவாகி உள்ள சீதா ராமம் திரைப்படத்தின் டிரைலர், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியிருந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சீதா ராமம் திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு "U" சான்றிதழும் வழங்கி இருந்ததோடு படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் சீதா ராமம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு, கொச்சியில் உள்ள மாலில் வைத்து நடைபெற்றிருந்தது.

அப்போது அங்கே ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்த நிலையில், மேடைக்கு அருகே திடீரென்று ஒரு ரசிகர் கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டார். துல்கரைக் கண்ட ஆனந்தத்தில் அந்த ரசிகர் கண்ணீர் வடிக்கவே உடனடியாக மேடைக்கு அழைத்த துல்கர், அவரைக் கட்டித் தழுவி தேற்றவும் செய்தார்.இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement