• Jul 24 2025

யாஷிகாவின் புகைப்படத்தை வைத்து கடவுளாக நினைத்து வணங்கிய ரசிகர்- அதிர்ச்சியில் நடிகை கொடுத்த ரிப்ளை

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கெளதம் கார்த்தி நடித்த, அடல்ட் திரைப்படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தில் அளவு கடந்த கவர்ச்சியை வாரி இறைத்து, இளசுகள் மனதில் இடம் பிடித்தவர் இவர்.இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  'பிக்பாஸ் சீசன் 2'  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியிக் மூலம்  அனைத்து தரப்பு ரசிகர்களாலும், கவனிக்கப்பட்ட நடிகையாக மாறினார்.இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி, என வரிசையாக பல  திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த யாஷிகா ஆனந்த், திடீரென விபத்தில் சிக்கி காயமடைந்திருந்ததோடு தற்பொழுது அதில் குணமடைந்து விட்டதாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், யாஷிகாவின் புகைப்படத்தை எடுத்து வைத்து அவரை சாமியாக வழிபட்டுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார்.


இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த யாஷிகா, 'நானும் மனுஷன் தானே. நாம் எல்லாரும் அன்பை பகிருவோம். நமக்கெல்லாம் ஒரு கடவுள் தான் இருக்கிறார். நாம் அவரை மட்டும் தான் வழிபட வேண்டும்' என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement