• Jul 26 2025

மணிகண்டன் மற்றும் மகேஷ்வரிக்கிடையில் வெடித்த சண்டை- பணப்பெட்டியுடன் வெளியேறிய கதிர்- 100வது நாளில் நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது கடைசி வாரத்தில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இன்னும் இந்த நிகழ்ச்சி முடிவடைய ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை விட்டு எவிட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து இருக்கின்றனர்.

அந்த வகையில் 100 வது நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். முட்டைப் பிரச்சினையால் மணிகண்டனுக்கும் மகேஷ்வரிக்கும் இடையில் பெரிய வாக்கு வாதமே நடைபெற்றது. தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் எதிர்பார்த்ததற்கு இணங்க ரச்சிதாவும் ஆயிஷாவும் என்ட்ரி கொடுத்தனர்.ரச்சிதாவின் வருகையை அவருடைய நெருங்கிய தோழியான ஷிவின் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்திலும் தான் ரச்சிதாவை அதிகமாக மிஸ் பண்ணுவதாக கூறிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் ரச்சிதா வந்ததும் அவரிடம் அதிகமான கேள்விகளை கேட்டுக்கொண்டு பாசமாக பேசிக்கொண்டு இருந்தார். 


தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி வந்தது.பணப்பெட்டி என்று சொல்வதைவிட பண மூட்டை என்று சொன்னால் சரியாக இருக்கும், இந்த பண மூட்டையை யார் எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கதிரவன் பண மூட்டையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அந்த பண மூட்டையில் வெறும் 3லட்சம் ரூபாய் இருந்தால், அனைத்து போட்டியாளர்களும் கதிரை எடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், யாருடைய பேச்சையும் கேட்காமல் 3 லட்சம் பணத்துடன் கதிர் வெறியேறினார்.


இவரது வெளியேற்றம் னைவருக்கும் அதிர்ச்சியையும் கொடுத்தது. பின்னர் மீதம் இருக்கும் மைனா நந்தினி விக்ரமன் அசீம் ஷிவின் அமுதவாணன் ஆகியோருக்கு விதம் விதமான மாமிச உணவுகள் வந்தன.அவர்களுடன் ஊனையவர்களுக்கும் உணவுகள் வந்ததையடுத்து அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.


Advertisement

Advertisement