• Jul 24 2025

மனைவியுடன் சண்டை... கடைசியில் நடந்த விபரீதம்...சீரியல் நடிகரின் தற்கொலை பற்றி உடையும் உண்மை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.

35 வயதான அவரது தற்கொலை கன்னட சினிமாவை தாண்டி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.


அத்தோடு கடந்த வருடம் தான் அவருக்கு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் தற்போது தற்கொலை செய்துகொண்டிருப்பது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது சம்பத் ராம் மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.


இச் சம்பவம் நடந்த அன்று சம்பத் மற்றும் அவரது மனைவி இடையே சிறிய தகராறு ஏற்பட்டது என்றும், அதன் பின் மனைவியை பயமுறுத்த தான் தற்கொலை செய்துகொள்வதாக தூக்கு போடுவது போல prank செய்திருக்கிறார் சம்பத்.

அது விபரீதத்தில் முடிந்து நிஜத்திலேயே அவர் உயிரிழந்து இருக்கிறார். அத்தோடு இந்த விஷயத்தை சம்பத் உடன் நடித்த நடிகர் ராஜேஷ் துருவா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.




Advertisement

Advertisement