• Jul 25 2025

விறுவிறுப்பான திருப்பங்களுடன் முடிவை நோக்கி நகரும் பச்சைக்கிளி சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களையும் மக்கள் விருப்பத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பச்சைக்கிளி.

வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.காதல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதையும், திருமணங்கள் குடும்பத்தை சேர்க்கிறது என்ற ஒன்லைனில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில், பச்சக்கிளி ரோலில் (நடிகை மோனிஷா அர்ஷக்) மற்றும் ஆதித்யாவாக (நடிகர் தீபக்) ஆகியோர் நடிக்கின்றனர்.

பச்சக்கிளியின் மூன்று அண்ணன்களான மீனாட்சி சுந்தரம் (நடிகர் ஸ்டாலின் முத்து), அழகர் (விஜய் ஆனந்த்) மற்றும் வேலு (அஸ்வின்) ஆகியோர்  நடிக்கின்றனர். அண்ணன்கள் மீது பச்சக்கிளி வைத்திருக்கும் மரியாதையும் பாசமும் மொத்த ஊரையும் வியக்க வைக்கிறது.


இதற்கிடையே பச்சக்கிளி சீரியலில், பச்சக்கிளி கர்ப்பமாகிறாள்.  ஆனால் ஆதித்யா அவளையும் குழந்தையையும் ஏற்க மறுக்கிறான். இதனால் கோபமடைந்த பச்சக்கிளி, ஆதித்யாவைப் பிரிவதாக சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பின்னர் ஆதித்யா, பச்சக்கிளியை புரிந்துகொண்டு அவளைத் தேடிச் செல்கிறான்.

தனது தவறுகளை ஒப்புக் கொண்டு, பச்சக்கிளியுடன் மீண்டும் இணைகிறான். 8 மாதங்களுக்குப் பிறகு பச்சக்கிளியின் வளைகாப்பு நடக்கிறது.அதற்கு ஆதித்யா தனது சகோதரர்களை அழைத்து வருகிறான். பின்னர் விவாகரத்துக்காக தன்னை நாடும் ஒரு ஜோடியை சேர்த்து வைக்கிறான் என கதை நகர்வதைக் காணலாம்.


Advertisement

Advertisement