• Jul 24 2025

தங்கமான சிங்கம் போன்ற இதயம் படைத்தவர்- திருமண நாளில் ராதிகா & சரத்குமார் நெகிழ்ச்சி பதிவு!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் க்ளாசிக் படங்களாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுகின்றன. தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கித்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் அண்மையில்  வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், வாரிசு ஆகிய படங்களில்  நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார், பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது தி ஸ்மைல் மேன், பரம்பொருள் & நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


சமீபத்தில் சரத்குமார் குடும்பத்துடன் இலங்கையின் கொழும்பு நகரில் சுற்றுலா சென்றிருந்தார்.அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் ஊடாக வைரலாகி வந்தன.சரத்குமார், கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணமாகி 22 ஆண்டுகள் ஆவதையொட்டி சரத்குமார் & ராதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில் ராதிகா, "தங்கமான சிங்கம் போன்ற இதயம் படைத்தவர். சக்திக்கான தூண்." என சரத் குமார் குறித்து பதிவிட்டுள்ளார். 

  மேலும் நடிகர் சரத்குமார் தமது பதிவில்,"22 வருடங்கள், இது எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்பப் பயணம், அன்பின் பயணம், புரிதலின் பயணம், தியாகங்களின் பயணம், ஒற்றுமையின் பயணம். இந்த மகிழ்ச்சியான பயணம் இதுவரை வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும், புயல்களையும் கண்டது. புரிதல், தியாகம் மற்றும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை நம் விதியின் பிணைப்பு   அறிய வைத்ததற்கு நன்றி.


இந்த நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன், அவர் நம்மை எப்போதும் ஒன்றாகவும், நம் அழகான குடும்பத்தை நம் எதிர்காலம் முழுவதும் ஒன்றாக வைத்திருக்க வலிமை அளிப்பார்". என சரத்குமார் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement