• Jul 23 2025

KPY நிகழ்ச்சி மேடையில் நிகழ்ந்த மனதை உருக்கும் சம்பவம்... கண் கலங்கி அழுத பிரபலங்கள்.. பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கவர்ந்த பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகின்ற ஒரு சேனல் தான் விஜய் டிவி. அதுவும் இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களிற்கு என்று ஒரு கூட்டமே உண்டு. 


அந்த வகையில் பலரும் விரும்பிப் பார்க்கின்ற ரியாலிட்ரி ஷோ தான் கலக்கப் போவது யாரு சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெறக் காத்திருக்கின்றது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதாவது விருதுக் கேடயங்களில் இறந்த நகைச்சுவைக் கலைஞர்களான மயில்சாமி, மனோபாலா, வடிவேலு பாலாஜி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.


அத்தோடு இவர்களை பற்றிப் பேசுகையில் மைனா, தாடி பாலாஜி, அமுதவாணன் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் கண் கலங்கி அழுகின்றனர். இந்த வீடியோ ஆனது பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement