• Jul 23 2025

நீண்ட நட்களுக்குப் பிறகு மகன் விஜய்யை சந்தித்த எஸ் ஏ சந்திரசேகர் போட்ட உருக்கமான பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியானது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஷ் இயக்கத்தில் லியோ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

நடிகர் விஜய் சினிமாவில் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு ஆரம்ப காலங்களில் முக்கிய துணையாக இருந்தவர் இவருடைய அப்பாவும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் தான். விஜய்யை பெரிய ஹீரோ ஆக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை செய்து அதில் வெற்றியும் கண்டார்.

தற்போது விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஆனால் விஜய் அப்பா எஸ்ஏசி உடன் சண்டை போட்டு சில வருடங்களாக பேசாமல் தான் இருந்தனர்.இந்நிலையில் தற்போது எஸ்ஏசி சர்ஜரி முடிந்து வீட்டில் ஓய்வில் இருக்கும் நிலையில் அவரை விஜய் நேரில் சந்தித்து பேசினார். 


அதன் போட்டோவும் சில தினங்களுக்கு முன் வைரல் ஆனது. மேலும் இன்று விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் எஸ்ஏசி-யை சந்தித்து பேசி இருக்கிறார்.இந்த போட்டோவை பகிர்ந்து இருக்கும் எஸ்ஏசி "பிள்ளைகள் ஒன்று சேரும் போது பெற்றோருக்கு மட்டும் அல்ல மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது" என குறிப்பிட்டு இருக்கிறார். 

Advertisement

Advertisement