• Jul 24 2025

நயன்-விக்கியின் திருமணத்திற்காக கண்ணாடி மாளிகை போன்ற பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளதாம்

stella / 3 years ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி 7 வருடங்கள் கடந்து இன்று திருமணம் வரை வந்துள்ளது .

இந்தநிலையில் இருவருக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாகாவும் பின்னர் அங்கு அனுமதி கிடைக்காததால் மகாவலிபுரத்தின் கடற்கரை ஓரம் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறவுள்ளது.

இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளது.இந்த திருமணத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தும் பொறுப்பை இயக்குநர் கௌதம் மேனன் ஏற்றுள்ளார்.

திருமணத்துக்கு 2 தினங்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. நயன்-விக்கி கடற்கரையில் வைத்து திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் இவர்களது திருமணத்துக்காக கண்ணாடி மாளிகை போன்ற பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement