• Jul 23 2025

லியோ படத்திலிருந்து லீக்கான முக்கிய காட்சி- இந்த சீனுக்காகத் தானே இத்தனை நாள் வெயிட்டிங்- அதிர்ச்சியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

லியோ படம் நாளை ரிலீஸ் ஆகவிருக்கிறது. படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கினாலும் அந்தக் காட்சியை காலை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என கூறியது.

ஆனால் அதிகாலை காட்சிதான் தங்களுக்கு வேண்டும் என்பதில் படக்குழு பிடிவாதமாக இருந்தது. அதன் காரணமாக பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கும் சென்றது. ஆனால் நீதிமன்றமோ அதிகாலை காட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது.


அதனையடுத்து படக்குழுவின் தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் குழு நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளரை சந்தித்து காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி மனு அளித்தது. ஆனால் தமிழ்நாடு அரசோ 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லவே இல்லை என கேட்டை சாத்தியது. இதனால் லியோ படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது.

படத்தின் ட்ரெய்லரில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று ஹைனா (கழுதைப் புலி) விலங்குடன் விஜய் சண்டையிடும் காட்சி. அதனை லோகேஷ் எப்படி காட்சிப்படுத்தியிருப்பார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.


இந்நிலையில் லியோ படத்தில் ஹைனாவுக்கும், விஜய்க்கும் நடக்கும் சண்டை காட்சி லீக்காகியுள்ளது. அந்தக் காட்சியில் விஜய் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டோடு பனி படர்ந்த வெளியில் இருக்க ஹைனா அவரை பார்த்து துரத்துகிறது. லீக்கான காட்சி மொத்தம் 13 நொடிகள் ஓடுகின்றன. இது தியேட்டரிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement