• Jul 25 2025

சின்னத்திரையில் மீண்டும் ஒரு உயிரிழப்பு; இளம் நடிகரின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் சக நடிகர்கள்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாகவே திரையுலகில் அடுத்தடுத்து பல மரணங்கள் இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது கே.விஸ்வநாதன், வாணி ஜெயராம், கஜேந்திரன் என வெள்ளித்திரையில் தொடர்ந்து மரணங்கள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது சின்னத்திரையிலும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 


அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று 'காற்றுக்கென்ன வேலி'. இந்த தொடரானது இளம் நடிகர்களை வைத்து இயக்கப்படுகிறது, அதுவும் கல்லூரியை மையமாக கொண்ட கதையம்சம் என்பதால் இதற்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம். 


மேலும் கல்லூரியை மையமாக கொண்ட எல்லா கதைகளிலும் இரண்டு கேங் இருப்பது வழமை. அதேபோல் இந்த சீரியலிலும் இரண்டு கேங் உண்டு. அதில் நாயகி வெண்ணிலாவின் கேங் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இருப்பினும் இப்போது இந்த கேங்கில் இருந்த ஒரு சில நடிகர்கள் சீரியலில் இருந்து விலகி விட்டனர்.


இவ்வாறான இந்த சீரியலில் நாயகியின் தோழனாக நடித்தவர் தான் ஹரி. இவர் நேற்றைய தினம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.


இவரின் இந்த திடீர் முடிவை அறிந்த சக நடிகர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர். அதுமட்டுமல்லாது இவரின் இழப்பிற்கு சின்னத்திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement