• Jul 26 2025

''நிறைய பேர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள்''…மனம் திறந்த கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் மல்லிகா ஷெராவத்.

பாலிவுட் சினிமாவில் இவர் குவாஹிஷ், மர்டர் போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் விரைவில் பிரபலமானவர்.

 இந்திய சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு சீன திரைப்படங்களிலும் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் ஜாக்கி சானுடன் இணைந்து தி மித் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதையடுத்து தமிழில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்து பட்டையை கிளப்பிய தசவதாரம் படத்தில் வில்லன் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பல ஆண்டுகள் கழித்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா கலாசலா பாடலுக்கு நடனமாடி இருந்தார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகிய மல்லிகா ஷெராவத், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், நடிகை மல்லிகா ஷெராவத் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ளார். அதில் பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கு கூட அப்படி மோசமான அழைப்புகள் வரும். நான் சினிமாவில் மட்டும் தான் கவர்ச்சியான தனது உடலை காட்டுவேன். ஆனால் அதையே காரணமாக வைத்து நிறைய பேர் என்னை படுக்கையறைக்கு அழைப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. ஆதலால் என்னை இனிமேல் யாரும் படுக்கையறைக்கு அழைத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று இந்த பேட்டியில் மல்லிகா ஷெராவத் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .



Advertisement

Advertisement