• Jul 26 2025

இறுதி ஊர்வல வண்டியில் நண்பனை பிரிய மனமின்றித் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர்.. அனைவரையும் கண் கலங்க வைத்த தருணம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தீவிர சிவபக்தரும் நடிகருமான மயில்சாமி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் வழிபாட்டில் பங்கேற்றுவிட்டு, நேற்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளார். 


இவரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது இவரின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. 


இந்நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது நண்பனைப் பிரிய மனம் இல்லாது அவர் பக்கத்தில் அழுத வண்ணமே இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது இறுதி ஊர்வல வண்டியில் கூட நண்பனின் உடலிற்கு அருகே கண்ணீர் மல்க அமர்ந்த வண்ணமே இருக்கின்றார். இந்தத் தருணமானது அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்து இருக்கின்றது.


இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் மயில்சாமியின் இறுதி ஊர்வல வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணமே இருக்கின்றன.


Advertisement

Advertisement