• Jul 24 2025

லியோ பட "நா ரெடி" பாடலால் ஏற்பட்ட புதிய பிரச்சினை- விஜய் வீட்டுக்கு அதிரடியாக அனுப்பப்பட்ட நோட்டீஸ்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இருந்தாலும் இப்பாடல் பல சர்ச்சைகளையும் சந்தித்தது.

அதன் படி விஜய் பிறந்தநாளன்று "நா ரெடி" பாடல் வெளியாகியது. இந்த பாட்டை தளபதி விஜய், அனிரூத் மற்றும் "ஜோர்த்தால" பாடல் புகழ் அசல் கோளாறு ஆகியோர் பாடியிருந்தார்கள். இந்த பாடல் ஒருபுறம் லைக்களை அள்ளிக்குவிக்க, அத்தோடு சேர்ந்து பிரச்சினையும் வந்தது.

 

தமிழகம் முழுவதும் போலீசார் போதை ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நேரத்தில், இந்த பாடல் முழுக்கு விஜய் வாயில் சிகரெட்டுடன் வரும் காட்சிகள் பல சமூக ஆர்வலர்களை கடுப்பாகியது. இந்நிலையில் செல்வம் என்ற ஒரு சமூக ஆர்வலர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்து விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 

இதனை அடுத்து சட்ட ரீதியாக விஜய் வீட்டுக்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது, மேலும் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டு, லோகேஷிடம் பேசியதையடுத்து, தற்போது அந்த பாடல் ஒளிபரப்பாகும்போதும் வழக்கமாக பயன்படுத்தப்படும் புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற வசனம் ஒளிபரப்படுகிறது. 


அதே சமயம் எங்கள் தளபதி மீதா கேஸ் கொடுத்த என்று செல்வத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக மீண்டும் அவர் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். இது குறித்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், முதலாம் தலைமுறை வாக்காளர்களான மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய அன்பை சம்பாரித்து வைத்துள்ளார் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, அவர் சற்று கவனமாக அனைத்திலும் செயல்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. 

அதே சமயம் நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது போல வரும் காட்சிகளுக்கு எதிராக கோஷம்போடும் சமூக ஆர்வலர்கள், ஏன் அதை தயாரிக்கும் நிறுவனங்கள் முன் நின்று போராடுவதில்லை என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement