• Jul 25 2025

உதயநிதி போட்ட ஒரு நியூஸ்... வைரலாகும் லியோ மீம்ஸ்... கசிந்தது லோகேஷ் ரகசியம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் லியோ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் படம் இப்படித்தான் இருக்க போகிறது என்று க்ளூ ஒன்றை கொடுத்துள்ளார். 


நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் படு மாஸாக நாளை வெளியாக இருக்கிறது, பல சிக்கல்களை தாண்டி படம் எல்லா இடங்களிலும் வெளியாகிவிடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் லியோ படம் படு மாஸாக இருப்பதாக டுவிட் செய்துள்ளார். மேலும் அதில் அவர் LCU  என குறித்தும் லியோ பட ரசிகர்களுக்கு க்ளூ கொடுத்துள்ளார். அவரின் விமர்சனத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அது தொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement