• Sep 09 2025

கர்ப்பமாக இருக்கும் மனைவி... திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன புகழ்... அன்பு முத்தங்களுடன் வெளியான புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான 'கலக்க போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், பென்சியா என்று அழைக்கப்படும் பென்ஸ் ரியாவை கடந்த வருடம்  செப்டம்பர் 1 ஆம் தேதி  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். அதாவது இருவரும்  காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர். 

இவர்களுக்குத் திருமணமாகி தற்போது ஒரு வருடம் கடந்த நிலையில் தனது வெட்டிங் டே முன்னிட்டு தனது மனைவி பென்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட புகழ், அதில் "என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை, என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்"  என்று தனது சமூக வலைதளத்தில் ரொம்ப மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கார்.


இந்நிலையில் தங்களுடைய நாளில் மனைவி கர்ப்பமாக இருக்கும் விடயத்தை தெரிவித்த புழிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  


Advertisement

Advertisement