• Jul 26 2025

தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி; தீபாவளிக்கு வருகிறது விருந்து

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகராக விளங்கி வருபவர் அஜித். இவரின் 'AK 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அவர் இந்த ப்ராஜெக்டிலிருந்து திடீரென விலகியுள்ளார். இதையடுத்து 'தடம், தடையறத் தாக்க' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி அஜித்தின் 'AK 62' படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. 


லைகா தயாரிப்பில் அஜித் -மகிழ்திருமேனி கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகிய இருவரிடமும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், ஆனால் அருண் விஜய் தான் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.


இந்நிலையில் தற்போது 'AK 62' குறித்த மற்றோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இன்னும் ஒரு சில தினங்களில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும், மார்ச் முதல் வாரத்தில் படத்தின் உடைய சூட்டிங் நிகழ்வுகள் ஆரம்பமாகும் என்றும், இந்த சூட்டிங் ஆனது ஜூன் -ஜூலை மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி தினத்தன்று இந்தப் படம் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகின்றது.


இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். ஏனெனில் AK 62 படத்தினுடைய அப்டேட்டுகளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த விடயமானது இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement