• Jul 25 2025

ஜீவாவை குடும்பத்தாரிடமிருந்து பிரிக்க நினைக்கும் ப்ரியா- தேவி தீட்டிய சதித் திட்டம் - பரபரப்பான திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே 2

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2.இதில் காவ்யா மற்றும் ஜீவா இருவரும் காதலிக்க, சந்தர்ப்ப சூழல்களால் அவர்கள் ஜோடி மாறி திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது.காவ்யா ஜீவாவின் அண்ணன் பார்த்தியையும் ஜீவா காவ்யாவின் அக்கா பிரியாவையும் திருமணம் செய்துள்ளனர்.

பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று தங்களது காதலை தியாகம் செய்யும் ஜீவா மற்றும் காவ்யா, இந்த திருமணத்திற்கு சம்மதித்ததோடு தற்பொழுது தமக்கு அமைந்த வாழ்க்கை ஜோடிகளோடு வாழுவதற்கும் தயாராகி விட்டனர். இருப்பினும் பார்த்திபனின் அத்தை யான தேவி செய்யும் சதியால் இரு குடும்பமும் குழப்பத்தில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் கவியா கர்ப்பமாகியுள்ளார். இதனை பார்த்திபனுக்கு சொல்லாமல் முதலில் ஜீவாவுக்கு தான் காவியா சொல்லி இருக்கின்றார் என தேவி கதை கட்டி விட்டதால் ப்ரியாவும் பார்த்திபனும் காவியா மற்றும் ஜீவா மீது சந்தேகத்தில் இருக்கின்றனர்.இப்படியான நிலையில் அடுத்த வாரம் என்ன நிகழப்போகின்றது என்பதற்காக ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் தேவி காவியாவும் ஜீவாவும் ஒரே வீட்டில் இருப்பதால் உங்கள் குடும்பத்திற்கு இடையில் அடிக்கடி சண்டை வரம் அதனால் நீ ஜீவாவைக் கூட்டிக் கொண்டு தனிக்குடித்தனம் போய் விடு என்று சொல்கின்றார். இதனைக் கேட்ட ப்ரியாவும் ஜுவாவிடம் வநது நீங்களும் நானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று சொல்கின்றார். இதனால் ஜீவா அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement